விமானம் பறந்து கொண்டிருந்த போது, நடுவானில் உறவினர்கள் மத்தியில் மணமகன் மணமகளுக்கு தாலி கட்ட திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
மதுரை கோரிப்பாளையத்தில் சேர்ந்த மரக்கடை உரிமையாளர் மகன் ராகேஷ் மற்றும் மதுரையை சேர்ந்த தொழிலதிபரின் மகள் தீச்சனா இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்கள் இருவருக்கும் வித்தியாசமான முறையில் திருமணத்தை நடத்த வேண்டும் என்று அவர்களது பெற்றோர்கள் திட்டமிட்ட நிலையில், மதுரையிலிருந்து தூத்துக்குடி தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு முன்பதிவு செய்தனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணி அளவில் விமானம் மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் மணமகன் மணமகன் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்கள் 161 பேர் பயணித்தனர். மேலும், விமானத்தில் சென்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின் தான் விமானத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் 7:30 மணிக்கு விமானம் புறப்பட்டது. விமானம் பறந்து கொண்டிருந்த போது, நடுவானில் உறவினர்கள் மத்தியில் மணமகன் மணமகளுக்கு தாலி கட்ட திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. காலை ஏழு 7:30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் காலை 9 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. மதுரையில் வித்தியாசமான முறையில் நடைபெற்ற இந்த திருமணம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…