காதலியையும், காதலியின் தாயையும் தீயிட்டு கொளுத்தி தானும் தற்கொலை செய்துகொண்ட இளைஞன்!

தனக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் தனது காதலி மற்றும் காதலியின் தாயை தீயிட்டுக் கொளுத்தி தானும் தற்கொலை செய்து கொண்ட காதலன்.
சென்னை கொருக்குப்பேட்டை அனந்தநாயகி 2-வது தெருவில் வசித்து வரக்கூடிய வெங்கடம்மாள் என்பவரின் மகள் தான் ரஜிதா. வெங்கட்டம்மாளின் கணவர் வெங்கடேஷ் மாநகராட்சியில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பதாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இவரது மகள் ரஜிதா கணவரின் வேலையை தொடர்ந்து செய்யும் படி வெங்கட்டம்மாள் வாங்கி கொடுத்துள்ளார். இருப்பினும் அவரது மகள் ரஜிதா வீட்டுக்கு அடங்காமல் ஏழு வருடங்களாக பூபாலன் என்னும் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரது தாய் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து கடந்த மாதம் நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளார்.
இந்நிலையில் மிகுந்த மனவருத்தத்தில் காணப்பட்ட ரஜிதாவின் காதலன் பூபாலன் நேற்று அதிகாலை 4 மணியளவில் ரஜிதாவின் வீட்டிற்கு மனைவியுடன் சென்று ரஜிதா மற்றும் அவரது தாய் வெங்கட்டம்மாள் இருவர் மீதும் தீ வைத்து கொளுத்தி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் 33 பக்கங்கள் அடங்கிய நோட்டில் தான் தீயிட்டுக் கொளுத்தியது மற்றும் தனது தற்கொலைக்கான காரணத்தை கூறி விட்டு அவர்களுடன் சேர்ந்து தானும் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். தீயில் கருகி மூன்று பேர் அப்பகுதியில் உயிரிழந்த நிலையில் கொருக்குப்பேட்டை காவல்துறையினருக்கு இந்த சம்பவம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025