அதிமுவில் நீக்கம்.. நீதிமன்ற தீர்ப்பு.! அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கும் தேனி எம்பி ஒ.பி.ரவீந்திரநாத்.!

OP Ravindranth

இன்று டெல்லியில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பாக கலந்து கொள்ள தேனி எம்பி ஒ.பி.ரவீந்திரநாத் கலந்துகொள்ள உள்ளார். 

கடந்த 2019 நாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஒ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பு வழங்ப்பட்டு இருந்தது. அதில், தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என அறிவித்தனர். மேலும் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டிற்கு எதுவாக தீர்ப்பை 30 நாட்களுக்கு ஒத்திவைத்தனர்.

இதனிடையே, எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ஓ.பன்னீர்செல்வம் மகன் தேனி எம்பி ஓ.பி.ரவீந்திரநாத் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகவும், அவரை அதிமுக எம்பியாக தொடர வேண்டாம் எனவும் மக்களவை சபாநாயகருக்கு அதிமுக தலைமை கடிதம் அனுப்பி இருந்தது.

இந்நிலையில் வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தேனி எம்பி. ஓ.பி.ரவீந்திரநாத் கலந்துகொள்வாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து அறிவித்துள்ளார். அதில், தான் நாளை நடைபெற உள்ள மலைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்க உள்ளதாகவும், அதற்கு முன்னதாக இன்று மாலை டெல்லியில் நடைபெறும்அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் கலந்துகொள்ள உள்ளதாகவும். அதற்கு மத்திய விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ள கடிதத்தையும் ஓபி.ரவீந்திரநாத் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்