தமிழகத்தில் புதிதாக மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி முதல் கட்டமாக கடந்த 27-ஆம் தேதியும் இரண்டாம் கட்டமாக கடந்த 30-ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்றது.இதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக கனிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவியில் 6 இடங்களிலும் , ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியில் 87 இடங்களிலும் வெற்றிபெற்றது.
இந்நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும்,பாஜகவின் மூத்தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லை என்றாலும் நாங்கள் பல இடங்களில் வெற்றி பெற்றிருப்போம்.உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டிருந்தால் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் என்ற பொன் ராதாகிருஷ்ணன் கூறியது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், கூட்டணியில் இருந்து கொண்டு எதிரான கருத்துக்களை கூறுவது கூட்டணி தர்மம் இல்லை என்று தெரிவித்தார்.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி, கௌரவப் பலகையில் இடம்பெற்றதை பெருமையாகக்…
குஜராத் : மாநிலம் வதோதரா மாவட்டத்தில், மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த 40 ஆண்டுகள் பழமையான கம்பீரா-முஜ்பூர் பாலம் 2025…
கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை…
கடலூர் : மாவட்டத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய ரயில் விபத்தில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…