#BREAKING: இந்த பகுதியில் தேர்வு மையம் கிடையாது.! தமிழக அரசு.!

கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியில் தேர்வு மையம் கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வருகின்ற ஜூன் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில்,கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதியில் தேர்வு மையம் இருப்பின் மாற்று மையங்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்படும். பிற மாநிலம், பிற மாவட்டத்திலிருந்து பயணிக்கும் மாணவர்கள் முதன்மை தேர்வு மையத்தில் தனி அறையில் தேர்வு நடத்தப்படும்.
சிறப்பு தேர்வு மையங்களுக்கு சென்று வர ஆசிரியர், மாணவர்களுக்கு தனியாக போக்குவரத்து வசதி செய்து தரப்படும் என்றும், கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு வீடுகளுக்கே சென்று ஹால்டிக்கெட் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025