தமிழ்நாட்டுக்கு வாராந்திர அடிப்படையில் தடுப்பூசி வழங்குவதாக மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது என டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி, செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலையை செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு, தமிழ்நாட்டுக்கு கூடுதலாக தடுப்பூசி ஒதுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் வலியுறுத்தினேன். ஜூன் மாதத்தில் கூடுதலாக வழங்கவேண்டிய தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கவில்லை.
மத்திய அரசு அளித்த அனைத்து தடுப்பூசிகளையும் தமிழக அரசு செலுத்திவிட்டது. மக்கள் தொகை அடிப்படையில் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கவில்லை. மொத்த தடுப்பூசியில் 90 சதவீதம் மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும். ரேஷன் கடையில் அரிசி வாங்குவது போல் மத்திய அரசிடம் தடுப்பூசி வாங்கும் நிலை உள்ளது. தமிழ்நாட்டுக்கு வாராந்திர அடிப்படையில் தடுப்பூசி வழங்குவதாக மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு மட்டும் தடுப்பூசியை மத்திய அரசு குறைத்து வழங்குவதாக டி.ஆர்.பாலு தெரிவித்தார். தடுப்பூசி குறித்து தமிழக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் தடுப்பூசி இல்லை. மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை. தமிழ்நாட்டுக்கு 12 கோடி டோஸ் தேவைப்படுகிறது என தெரிவித்தார்.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…