, , ,

திருச்செந்தூர் கோவிலில் இந்த நேரத்தில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி – கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

By

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய இன்று முதல் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நிலவும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பின் காரணமாக,அதன் தடுப்பு நடவடிக்கையாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று முதல் நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.அதன்படி,காலை 5 மணியில் இருந்து இரவு 7 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேலும்,தங்கத்தேர் வலம் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்யும் நேரம் 3 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.மார்கழி மாதம் என்பதால் அதிகாலை 3 முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு முன்னதாக அனுமதிக்கப்பட்ட நிலையில்,இன்று முதல் இந்த நேரக்கட்டுப்படுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Dinasuvadu Media @2023