முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,இன்று சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில்(ECR) சைக்கிள் பயிற்சி மேற்கொண்டார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,காலை நடைப்பயிற்சி, மாலை உடற்பயிற்சி என்பதை மட்டும் தொடர்ந்து செய்து,உடற்பயிற்சி மீது தீவிர காதல் உடையவர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்.இதுவே,அவரது பிட்னஸ் ரகசியமாக கூறப்படுகிறது.
ஏனெனில்,முன்னதாக தேர்தல் நேரத்தில் கூட அவர் பயணம் மேற்கொள்ளும் இடங்களில் காலை நடைப்பயிற்சியை விடாமல் செய்து வந்தார்.குறிப்பாக, சில நேரங்களில் நடைப்பயிற்சி போகும் இடங்களிலேயே தன்னுடைய காலை பரப்புரையைத் தொடங்கியதாக கூறப்படுகிறது.அதேபோல், அவ்வப்போது முதல்வர் ஸ்டாலின் சைக்கிளிங் செய்வதும் வழக்கம்.அதன்படி,முதல்வர் கடைசியாகக் கடந்த ஜூலை 4-ஆம் தேதி முட்டுக்காட்டில் இருந்து மாமல்லபுரம் வரை சைக்கிளில் சென்றார்.
இந்நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில்(ECR) சைக்கிள் பயிற்சி மேற்கொண்டார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையில்,முதல்வர்,மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தேநீர்க் கடையில் தேநீர் அருந்தினார்.மேலும்,முட்டுக்காட்டில் இருந்து மாமல்லபுரம் வரையிலான முதல்வரின் இந்த பயணத்தில் மக்களுடன் அவர் உரையாடினார்.
அங்கிருந்த மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…