அமெரிக்கா போல ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும், உடனடியாக எண்ணப்பட்டு முடிவு தெரிவிக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் ஓட்டுப் பதிவு எந்திரம் இயந்திரம் முறையை கைவிட்டு வாக்குச்சீட்டு முறையை கொண்டுவரவேண்டும் தெரிவித்தார்.
மேலும், பல இடங்களில் பணப்பட்டுவாடா நடைபெற்றுள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் பணப்பட்டுவாடாவை கண்டுகொள்ளவில்லை என்றும், தேர்தலில் ஓட்டுக்காக பணம் கொடுக்கும் வேட்பாளர்களுக்கு 10 ஆண்டுகள் தடை விதித்தால் தான் இது குறித்து ஒரு பயம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியா டிஜிட்டல் இந்தியா என கூறிக் கொண்டால் மட்டும் போதாது. ஓட்டளிக்கும் முறை இயந்திரமாக மாற்றி விட்ட நிலையில், தொழில்நுட்பத்தை கையாண்டு முடிவுகளை அறிவிப்பதில் ஏன் காலதாமதம் ஏற்படுகிறது என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், அமெரிக்கா போல ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும், உடனடியாக எண்ணப்பட்டு முடிவு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…