ஆதார் எண் இல்லாதவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் – சென்னை மாநகராட்சி ஆணையர்

சாலையோரம் வசிப்போர், வீடற்றோர், ஆதார் எண் இல்லாதவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
இன்று தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் இன்று 10,000 தடுப்பூசி முகாம்கள் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் மட்டும் 1,600 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் நிலையில், சென்னையில் மூன்றரை இலட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சாலையோரம் வசிப்போர், வீடற்றோர், ஆதார் எண் இல்லாதவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும், சென்னையில் தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடைபெறும் என்றும், தடுப்பூசி கையிருப்பு அதிகம் இருப்பதால் பொதுமக்கள் விரைவாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025