வேலூர் அருகே நச்சுமேடு மலைக்கிராமத்தில் உள்ள சிலர் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து,அரியூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் அன்பழகன்,காவலர்கள் இளையராஜா மற்றும் யுவராஜ் உள்ளிட்ட 3 பேரும்,சாராய வியாபாரிகளை பிடிக்க சென்றபோது,அவர்களின் வீடு பூட்டியிருந்த நிலையில்,வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 15 பவுன் நகை மற்றும் 8.5 லட்சம் பணம் போன்றவற்றை திருடியுள்ளனர்.
இதனையறிந்த அப்பகுதி கிராம மக்கள் போலீசார் மலையிலிருந்து கீழே இறங்குவதற்குள் அவர்களை மடக்கி பிடித்தனர்.
இதனால்,அவர்கள் 3 பேரும்,தாங்கள் எடுத்த நகை மற்றும் பணத்தை திருப்பிக் கொடுத்தனர்.இருப்பினும்,சம்மந்தப்பட்ட 3 காவலர்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கேட்டுக்கொண்டனர்.
இதனையடுத்து,உதவி ஆய்வாளர் அன்பழகன்,காவலர்கள் இளையராஜா மற்றும் யுவராஜ் உள்ளிட்ட 3 பேரையும்,பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவிட்டார்.
இந்நிலையில்,நகை,பணம் திருடிய வழக்கில் அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும்,உதவி ஆய்வாளர் அன்பழகன்,காவலர்கள் இளையராஜா மற்றும் யுவராஜ் உள்ளிட்ட 3 பேர் மீதும்,வசிப்பிடங்களில் புகுந்து திருடுதல் மற்றும் வீட்டிக்குள் அத்துமீறி புகுந்து பொருட்களை எடுத்து செல்லுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து,தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…