தமிழகம் முழுவதும் குழந்தை விற்பனை.? 5 தனிப்படைகள் அமைப்பு.!

Published by
மணிகண்டன்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த மகப்பேறு மருத்துவர் அனுராதாவை இன்று திருச்செங்கோடு காவல்துறையினர் கைது செய்தனர். திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பெண் குழந்தையை விற்க முற்பட்டது தொடர்பாக தம்பதியினர் அளித்த புகாரின் பெயரில் கைது செய்யப்பட்டார்.

தினேஷ் – நாகஜோதி தம்பதிக்கு அண்மையில் 3வதாக பிறந்த பெண் குழந்தையை சிகிச்சைக்கு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு தம்பதி அழைத்து வந்துள்ளனர். அதன் பிறகு லோகம்மாள் என்பவர் தொடர்புகொண்டு குழந்தையை 2 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய தூண்டியுள்ளார். இதற்கு மருத்துவர் அனுராதாவும் உடந்தை என்பதை அறிந்த தினேஷ் – நாகஜோதி தம்பதி காவல்துறைக்கு புகார் அளித்துள்ளனர்.

ஏழை தாய்மார்கள் தான் டார்கெட்.? குழந்தை விற்பனையில் ஈடுபட்ட அரசு பெண் மருத்துவர் கைது.!

இந்த புகாரின் அடிப்படையில் இடைத்தரகர் லோகம்மாள், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த மகப்பேறு மருத்துவர் அனுராதா ஆகியோரை உடனடியாக கைது செய்தனர். மருத்துவர் மூலமாக குழந்தைகள் பற்றிய விவரங்களை பெற்று, பின்னர் அவர்களிடம் பேசி குழந்தைகளை பலருக்கு விற்றதாகவும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

கைது செய்யப்பட்ட மருத்துவர் அனுரதாவை பணியிடை நீக்கம் செய்தும், விசாரணையை தீவிரப்படுத்தவும்  மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து தற்போது, திருச்செங்கோடு டிஎஸ்பி இமயவர்மன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மகப்பேறு மருத்துவர் அனுராதா மற்றும் இடைத்தரகர் லோகம்மாள் இதுவரை சுமார் 10 குழந்தைகளை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விற்றதாக தெரியவந்துள்ளது.

இதனால், இந்த குழந்தை விற்பனை விவகாரத்தில் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் விற்றவர்கள் விவரம் , வாங்கியவர்கள் விவரம் என பல்வேறு கட்ட விசாரணை மேற்கொள்ள இந்த தனிப்படைகள் அமைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

9 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

11 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

15 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

16 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

18 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

18 hours ago