தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 25,872 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் முதல்முறையாக இன்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,872 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 1,012 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 17,597 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று கொரோனாவுக்கு 11 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் பலி எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் இன்று 610 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 14,316 பேர் குணமடைந்துள்ளனர். இன்று ஒரே நாளில் 14,101 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5,28,534 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது மருத்துவமனையில் 11,345 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று பாதிக்கப்பட்ட 1,286 பேரில் 42 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து 4வது நாளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
வாஷிங்டன் : விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து இன்று சுபான்ஷூ சுக்லா குழுவினர் பூமிக்கு…
லார்ட்ஸ் : லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து…
சென்னை : கீழ்ப்பாக்கத்தில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.…
கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும்…
சென்னை : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…