அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் முழு உருவ சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் முழு உருவ சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அவருடன் முதன்மை செயலாளர் ஆர்.டி.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் மட்டும் பங்கேற்கிறார்கள்.
இதேபோல் அண்ணா நினைவிட வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்துக்கும் சென்று மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து வணங்குகிறார். இதனிடையே, கொரோனா அச்சுறுத்தலால் இன்று கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை ஆடம்பரமின்றி திமுகவினர் கொண்டாட வேண்டும் என்றும் கொரோனா பரவலால் சென்னையில் கருணாநிதி பிறந்த நாளுக்கு ஆடம்பர நிகழ்வுகளை நடத்த வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நான் அஞ்சலி செலுத்த போகும் போது யாரும் கூட்டம் கூடாமல் அவரவர் இருந்த இடத்திலேயே பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும். குறிப்பாக இருக்கும் இடத்திலேயே சமூக இடைவெளியை கடைப்பிடித்து பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்று முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…