இன்று உலக வனவிலங்கு தினம்..!

Published by
murugan

உலகில் தற்போது அழிந்து வரும் வன விலங்குகளை பாதுகாக்கவும், இயற்கை சமநிலை மாறாமல் இருக்கவும் மார்ச் 3-ம் தேதி “உலக வனவிலங்கு தினம்” கடைபிடிக்கப்படுகிறது.

நம் உலகில்  பல வகையான வனவிலங்குகளும் , செடிகொடிகளும் உள்ளன. வன உயிர்களால் மனிதர்களுக்கு  பல நன்மைகள் ஏற்படுகிறது. ஆனால் வன உயிர்களுக்கு மனிதர்களால்  ஆபத்து மட்டுமே நிகழ்கிறது.மனிதகளின்  நடவடிக்கைகளால்  விலங்குகளும் , செடிகளும் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

தற்போது உள்ள உயிரினங்களில் சுமார் 25 விழுக்காடு வரும் ஆண்டுகளில் அழிந்துபோகும் ஆபத்து இருப்பதாக என ஐ.நா.,
எச்சரித்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி ஐ. நாவின்  68-வது பொதுக் கூட்டம்  நடைபெற்றது.இந்த கூட்டத்தில் வனவிலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதையெடுத்து மார்ச் 3-ம் தேதி “உலக வனவிலங்கு தினம்” அனுசரிக்கப்படும் எனப் பிரகடனப்படுத்தப்பட்டது. 1973ஆம் ஆண்டு CITES (the Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) என்னும் ஒப்பந்தம் கையெழுத்தான நாளை அடிப்படையாகக் கொண்டு  மார்ச் 3-ம் தேதி “உலக வனவிலங்கு தினம்” தேர்ந்தெடுக்கப்பட்டது.

மனிதர்களால் சட்ட விரோதமாக பல  வன உயிரினங்கள் அழிக்கப்படுகின்றன. இவை தடுக்கப்பட வேண்டும் என்பதற்காக இத்தினம்  அனுசரிக்கப்படுகிறது.சமீபத்திய ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் வனப்பகுதிகள் கருகியது.மேலும் வனப்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான வன விலங்குகள் உயிரிழந்தன. எனவே காடுகளையும் , வன விலங்குகளையும் பாதுகாப்பது நம்முடைய  ஒவ்வொருவரின் கடமை.

Published by
murugan

Recent Posts

அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் கடிதம்.!

அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் கடிதம்.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…

1 minute ago

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…

1 hour ago

பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு `அதி உச்சமான’ கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசு.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…

2 hours ago

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வார காலத்திற்கு தள்ளிவைப்பு – IPL நிர்வாகம் அறிவிப்பு.!

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…

2 hours ago

ராயல் சல்யூட் : பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்.!

ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…

3 hours ago

போர் பதற்றம்., நேரடி தகவல்கள் வேண்டவே வேண்டாம்! பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…

4 hours ago