மதுரையில் கலைஞர் நூலகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார்.
முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு மதுரையில் சர்வதேச தரத்தில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என அறிவித்தார். இதனைத்தொடர்ந்து மதுரை புதுநத்தம் சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட இடத்தை முதல்வர் நேரடியாக சென்று பார்வையிட்டார். 2.6 ஏக்கர் நிலப்பரப்பில் 2 ஏக்கரில் கட்டிடம் கட்டப்படுகிறது.
பின்னர், இந்த நுலக கட்டுமானத்திற்கு ரூ.99 கோடியும், தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் நூல்கள் வாங்க ரூ.15 கோடியும் நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த நுலகத்திற்கு ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவு நூலகம்’ என்ற பெயரில் அமைய உள்ளது. பல்வேறு நவீன தொழில் நுட்பத்துடன் இந்த நூலகம் ஒரு வருடத்தில் கட்டி முடிக்கப்பட உள்ளது. இந்நிலையில், கலைஞர் நூலகம் கட்டுமானப் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…