இன்று முதல் 4-ம் தேதி வரை மளிகை பொருட்களுக்கான டோக்கன் விநியோகம்…!

Published by
லீனா

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் 13 வகையான மளிகை பொருட்கள் பெற்றுக் கொள்வதற்கான டோக்கன், இன்று முதல் 4-ம் தேதி வரை வீடுகளுக்கே சென்று  விநியோகிக்கப்படுகிறது.

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் 13 வகையான மளிகை பொருட்கள் பெற்றுக் கொள்வதற்கான டோக்கன், இன்று முதல் 4-ம் தேதி வரை வீடுகளுக்கே சென்று  விநியோகிக்கப்படுகிறது. இது தொடர்பாக வ்ரளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து தற்போது கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள கொரோனா நோய் பரவலை கருத்தில் கொண்டும் மத்தியஅரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் பரிந்துரைத்துள்ள ஒரு சில கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டும் கொரோனா நோய் பரவல் சங்கிலியை உடைத்து பரவலை உடனடியாக தடுக்கும் பொருட்டு 07.06.2021 முடிய அதிக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஆணையிடப்பட்டு செயலாக்கத்தில் உள்ளது.

இருப்பினும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தொடர்ந்து இன்றியமையாப் பண்டங்கள் மற்றும் கொரோனா நிவாரணத் தொகை உள்ளிட்ட அதீத மான்யத்துடன் கூடிய நல உதவிகள் தொடர்ந்து பெறும் வண்ணம் நியாய விலைக் கடைகள் தினந்தோறும் காலை 08.00 மணி முதல் நண்பகல் 12.00 வரை செயல்பட அனுமதித்து செயல்பாட்டில் உள்ளது. கொரோனா நோய் பரவலை தடுக்கும் வண்ணம் ஏற்கனவே முந்தைய மாதங்களில் கடைபிடித்தது போலவே ஜுன் 2021 மாத பொது விநியோகத் திட்ட செயள பாட்டினையும் பாதுகாப்புடன் சுழற்சி முறையில் மேற்கொள்ள நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு மிகா வண்ணம் டோக்கன்கள் வழங்கி விநியோகத்தினை பாதுகாப்புடன் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 01.06.2021 முதல் 04.06.2021 முடிய 4 தினங்களுக்கு நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்கு சென்று அவர்தம் பொருட்கள் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரம் குறிக்கப்பட்டுள்ள டோக்கன்களை விநியோகம் செய்வார்கள். அந்த டோக்கன்களில் குறிப்பிடப்பட்டநாள் / நேரத்தில் அட்டைதாரர்கள் அவர்தம் நியாய விலைக் கடைகளுக்கு சென்று அவருக்குண்டான கொரோனா நிவாரண கூடுதல் அரிசி உள்ளிட்ட இன்றியமையாப் பண்டங்களை (துவரம் பருப்பு)பெற்றுச் செல்ல வேண்டும்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

53 minutes ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

2 hours ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

4 hours ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

4 hours ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

5 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

21 hours ago