இன்று மற்றும் நாளைக்கு பதிலாக மே 2, 3 ஆம் தேதிகளில் டோக்கன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இதனால், ஏப்ரல், மே மாதங்களில் தமிழக ரேஷன் கடைகளில் கிடைக்கும் அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.அந்த வகையில், அடுத்து மே மாதம் வழங்கப்படும் இலவச பொருட்களுக்கு கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க இன்று மற்றும் நாளை வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதில் ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம்பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், அரிசி உள்ளிட்டவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மற்றும் நாளைக்கு பதிலாக மே 2, 3 ஆம் தேதிகளில் டோக்கன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள், நேரத்தில் அத்தியாவசிய பொருட்களை மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் மே 4 முதல் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ரேஷன் கடைக்கு வரும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…