, , ,

வருகின்ற அக்.15 முதல் ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

By

வருகின்ற அக்.15 முதல் ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிப்பு.

கொரோனா ஊரடங்கால் கடந்த சில மாதங்களாக சுற்றுலாத் தளங்கள் அனைத்துமே மூடப்பட்ட நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றில் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் மலர்விழி அவர்கள் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். பிரதான அருவி மற்றும் நடைபாதை அதிக நீர்வரத்து காரணமாக சேதமடைந்து இருப்பதைக் கண்ட அவர் ஒரு வாரத்திற்குள் இவற்றை சரி செய்து சீரமைப்பு பணிகளை முழுமையாக முடித்த பின்பு, வருகிற 15-ஆம் தேதி முதல் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு பயணிகள் வர அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Dinasuvadu Media @2023