உழவர் சந்தைகளில் விளைபொருட்களின் நச்சுத்தன்மையை கண்டறிய, கருவிகள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தமிழக வேளாண்மைத்துறை அறிவித்துள்ளது. விளைபொருட்கள் தரமானதாக மக்களுக்கு கிடைக்க வேண்டுமென தமிழக வேளாண்மைத்துறை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், காய்கறிகள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக அதில் ரசாயன பொருட்கள் தெளிப்பதாக புகார் எழுந்த நிலையில், உழவர் சந்தைகளில் உள்ள காய்கறிகளில் நச்சுத்தன்மை குறித்த ஆய்வுக்கு கருவிகள் பொறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
விற்பனைக்கு கொண்டுவரப்படும் பழங்கள், காய்கறிகளில் நச்சுத்தன்மையை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக 25 உழவர் சந்தைகளில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் பழங்கள், காய்கறிகளில் உள்ள ரசாயன மருந்துகள் குறித்து ஆய்வு செய்ய கருவிகள் அமைக்கப்படவுள்ளது. பாதுகாப்பான காய்கறிகள், பழங்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய தமிழக வேளாண்மைத்துறை புதிய முயற்சியை எடுத்துள்ளது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…