திருநங்கை பாரதி கண்ணம்மா, தலையில் பானையை சுமந்த வண்ணம் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில். திருநங்கை பாரதி கண்ணம்மா, மதுரை தெற்கு தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
இவர் அண்மையில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், இவருக்கு கடந்த தேர்தலில் இவருக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த தேர்தலிலும் தனக்கு பானை சின்னம் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில், தலையில் பானையுடன் வீதி வீதியாக பரப்புரை மேற்கொள்கிறார்.
அப்போது, திருநங்கை வாழ்க்கை தரத்தை முன்னேற்ற தனக்கு வாய்ப்பளிக்குமாறும், அனைவருக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்க வேண்டும் என்பதையும் முன்னிறுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இவர் 4-வது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…