Savukku Shankar [File Image]
சென்னை: சவுக்கு சங்கருக்கு மே 28வரையில் நீதிமன்ற காவல் விதித்தது திருச்சி குற்றவியல் நீதிமன்றம்.
பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர் மற்றும் தனியார் யூ-டியூப் சேனல் நிறுவனர் பெலிக்ஸ் மீது கோவை, திருச்சி, சென்னை, சேலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் உத்தரவை சென்னை காவல் ஆணையர் பிறப்பித்துள்ளார்.
சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் இருந்து வந்த நிலையில், அவர் நேற்று திருச்சியில் பதியப்பட்ட வழக்கிற்காக திருச்சி நீதிமன்றம் அழைத்து வரப்பட்டு இருந்தார். திருச்சியில் பதியப்பட்ட வழக்கு தொடர்பாக அவருக்கு நேற்று , ஒருநாள் போலீஸ் காவல் விதித்து நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவு பிறப்பித்தார்.
இன்றுடன் ஒருநாள் காவல் நிறைவடைந்த நிலையில், மீண்டும் திருச்சி நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட அவருக்கு மே 28வரையில் நீதிமன்ற காவல் விதித்து திருச்சி நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவிட்டார். இதனை அடுத்து, தற்போது திருச்சியில் இருந்து அவர் ஏற்கனவே இருந்த கோவை மத்திய சிறைக்கு சவுக்கு சங்கர் தற்போது கொண்டு செல்லப்படுகிறார்.
இதே வழக்கில் கைதாகியுள்ள பெலிக்ஸிற்கு இன்று காலை கோவை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சந்தோஷ், இந்த வழக்கு தொடர்பாக வரும் மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் இருக்க உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…