இந்து பயங்கரவாதம் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறிய நிலையில் ,சட்டவிரோதி ஆகிவரும் அமைச்சரை ஆளுநர் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கத்தில் சில இயக்கங்கள் தொடர்ந்து அரசியல் செய்தால் இந்து பயங்கரவாதம் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் தொலைக்காட்சியின் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், பாஜகவுக்கு அதிமுக பாதம் தாங்குவது குறித்து நமக்கு ஆட்சேபணை இல்லை. அதற்காக நெஞ்சில் நஞ்சும், வாயில் வன்மமும் கொண்டு நாட்டை வன்முறைப் பாதைக்கு மாற்ற ராஜேந்திரபாலாஜி என்ற ஒரு அமைச்சர் திட்டமிடுவது வன்மையான கண்டனத்துக்குரியது.
அரசியலமைப்பு சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்தவர் கண்ணுக்கு முன்னால் மதச்சார்ப்பின்மைக்கு எதிராக பேசுகிறார். மக்களை மதரீதியாக துண்டாட துணிகிறார். ராஜேந்திர பாலாஜியை ஆளுநர் பதவிநீக்கம் செய்வதோடு, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…
மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…