2 constituencies to AMMK in BJP alliance [file image]
TTV Dhinakaran: பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் பரபரப்பாக இருந்து வருகிறது. மக்களவை தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் வாக்குறுதி என தேர்தலுக்கு முந்தைய பணிகளை முடித்த திமுக பிரச்சாரத்துக்கு தயாராகி வருகிறது.
திமுகவை தொடர்ந்து, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்து வருகின்றனர். அந்தவகையில், தற்போது பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்திய நிலையில், அமமுகவுக்கு மக்களவை தேர்தலில் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிடிவி தினகரன், நாங்கள் கேட்ட 2 தொகுதிகளை கொடுத்துள்ளார்கள். முதலில் பாஜக எங்களுக்கு அதிக தொகுதிகளை கொடுத்தார்கள். பின்னர் கூட்டணிக்கு அதிக கட்சிகள் வந்ததால் குறைத்து தந்துள்ளார்கள். ஒரு தொகுதி போதும் என்றுதான் கூறினேன். குறைந்தபட்சம் 2 தொகுதிகளில் போட்டியிடுங்கள் என்று பாஜக கூறியது. இருந்தாலும் நாங்கள் கேட்டது எங்களுக்கு கிடைத்தது.
பொதும் என்ற மனநிலை இருந்ததால் 2 தொகுதிகளை பெற்றுக்கொண்டோம். எந்த தொகுதிகள் என்பதை பின்னர் பாஜக அறிவிக்கும். அதன்படி, எந்தெந்த தொகுதிகள் என்று பாஜக அறிவித்ததை அடுத்து அமமுகவுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்காள். இரு தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் தான் போட்டியிடுவோம்.
பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வெற்றி பெற அமமு க‘அணில்’ போல் செயல்படும். திமுக அரசின் பொய் பிரச்சாரங்களை வீடு வீடாக சென்று முறியடிப்போம் என கூறிய அவர், நான் தேனியில் போட்டியிட வேண்டும் என்பது கட்சியினரின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது என தேனியில் போட்டியா என்ற கேள்விக்கு பதிலளித்தார். மேலும், நான் பிறந்த மண்ணான தஞ்சையில் போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளேன் என தெரிவித்தார்.
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…