கூட்டணி பயத்துல தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்! திமுகவை சாடிய டிடிவி தினகரன்!
எப்போதும் பிற கட்சிகள் மற்ற கட்சிகளின் விவகாரங்களில் தலையிட முடியாது என டி டி வி தினகரன் பேசியுள்ளார்.

சென்னை : வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக -பாஜக கூட்டணி முதல் நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றது வரை பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் “ஏற்கனவே 2021வரை பாஜகவுடன் கூட்டணி வைத்தவர் தான் அவர். அரசியல் சூழல் காரணமாக பேசியதை திரும்பபெற்று மக்களுடைய நலனுக்காகவும் கட்சியினுடைய நலனுக்காகவும் இப்படி செய்யலாம் அதைப்போல தான் இதனை நான் பார்க்கிறேன்.
அடுத்ததாக பாஜக உட்கட்சி விவகாரத்தில் தலையிடுமா என்பது போல கேள்விகள் எழுப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் ” எப்போதுமே அடுத்த கட்சி உட்கட்சி விவகாரம் குறித்து தலையிடமாட்டார்கள். தலையிடவும் முடியாது…தலையிடவும் கூடாது.
பன்னீர்செல்வம் ஏற்கனவே 24 தேர்தலில் மோடி அவர்கள் வெற்றிபெறவேண்டும். மோடி மீண்டும் பிரதமர் ஆகவேண்டும் என்பதற்காக கூட்டணியில் இருந்தார். மற்றபடி அமித்ஷா பன்னீர்செல்வவத்தை கைவிட்டுவிட்டார் என்றால் அந்த கேள்வியை நீங்கள் நயினார் நாகேந்திரனிடம் தான் கேட்கவேண்டும். ஏற்கனவே, இது போன்ற கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்துவிட்டார்.
அடுத்ததாக நயினார் நாகேந்திரன் பாஜக தலைவராக பொறுப்பேற்றது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் ” கடந்த மூன்று ஆண்டுகளாக நண்பர் அண்ணாமலை அரசியல் செயல்பாடு என்பது சிறப்பாக இருந்தது. திமுகவுக்கு சொப்பனாக விளங்கினார். புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கும் நயினார் நாகேந்திரன் சொல்லிருக்கிறார் அண்ணாமலை செயல்பாடு சிறப்பானது எனவே, அவரை கட்சியில் இருந்து ஒதுக்கவே முடியாது என்று பேசியிருந்தார்” எனவும் தினகரன் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து ” நாங்கள் எல்லாம் அம்மாவுடைய தொண்டர்கள். அவரிடம் நாங்கள் அரசியலை கற்றுக்கொண்டோம் . அம்மாவுடைய அடுத்தகட்டமாக அரசியலை கொண்டு செல்லும் கழகமாக அம்மா கழகம் இருக்கிறது. பாஜக என்பது இந்தியா முழுவதும் ஆதிக்கத்தில் இருக்க கூடிய ஒரு கட்சி. தேசிய ஜனநாயக கூட்டணி பலமாக இருப்பதால் சட்டசபையில் பயத்தில் மாநில உரிமை போன்ற தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறார்கள்” எனவும் முகஸ்டாலினை மறைமுகமாக தினகரன் விமர்சித்து பேசினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025