தலையில் டிவி விழுந்து சென்னை கிழக்கு தாம்பரம் சேலையூர் சேர்ந்த 3 வயது குழந்தை உயிரிழப்பு
சென்னை கிழக்கு தாம்பரம் சேலையூர் சத்யா நகரில் வசித்து வருபவர் பாலாஜி, இவருக்கு 3 வயதுடைய கவியரசு என்ற குழந்தை ஒன்று உள்ளது ,இந்நிலையில் பாலாஜி தனது வீட்டின் அறையில் தொலைக்காட்சிப் பெட்டிக்கு மேல் தனது செல்போனை ஜார்ஜ் போட்டு வைத்துள்ளார் அப்பொழுது அவர் செல்போனுக்கு அவரது நண்பர் ஒருவர் வழியாக அழைப்பு வந்துள்ளது .
மேலும் போன் அடிக்கும் சத்தம் கேட்டவுடன் பாலாஜியின் குழந்தை கவியரசு ஓடி சென்று செல்போனை எடுக்கச் சென்றுள்ளார் அப்போது ஜார்ஜ் வயரில் குழந்தை சிக்கி அருகிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டி குழந்தையின் தலையில் விழுந்தது இந்நிலையில் சத்தம் கேட்டு ஓடி வந்த பாலாஜி மற்றும் அவரது மனைவி குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கவியரசு உடலை கொண்டு சென்றனர்.
அப்போது அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர் இந்நிலையில் கவியரசு உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுப்பிவைத்தனர், மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் 174 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…