கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு…!

தாம்பரம் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை தாம்பரம் அருகே உள்ள வரதராஜபுரம் எனும் பகுதியில் உள்ள ஜெயக்குமார் என்பவர் வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக பணியாளர்கள் சென்றுள்ளனர். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்ற ஊழியர்கள் ஏழுமலை, ராஜேஷ் ஆகியோர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரது உடலையும் கைப்பற்றி மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!
June 30, 2025