நிதியுதவியை விட இரண்டு உயிர்களுக்கு நீதி தேவை – கமலஹாசன்

சாத்தான்குளம் சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்ட கமலஹாசன்.
சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் இருவரும் காவல்துறையினரால், கடுமையான முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சாத்தான்குளத்தில் நிகழ்ந்திருக்கும் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரின் மரணமும், அதனை சுற்றி நிகழ்ந்திருக்கும் மனித உரிமை மீறல்களும், சட்ட மீறல்களும் இந்நிலை நம்மில் எவருக்கு வேண்டுமானாலும் நிகழக்கூடும் என்ற அச்சத்தை நம்மிடையே விதைத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இரத்தம் சொட்ட சொட்ட இருவரைத் தாக்கும் மூர்க்கத்தனம் கொலைபாதகக் குற்றம். அதை செய்தவர் எவராயிருந்தாலும் அந்த தவறுக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்கின்ற குரல்களுக்கு இடையில் இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதை பார்க்கும் போது, அரசு இந்த விஷயத்தில் துளி கூட உண்மைத்தன்மையை கண்டறிய முயலவில்லை என்பது தெரிகிறது.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியும், நிவாரணமும் தேவை தான். ஆனால் அதை மட்டும் அவசரமாக அறிவித்து விட்டு இந்த கொலைகளை முதல்வர் கடந்து விடக் கூடாது என்றும், நிதியுதவியை விட இரண்டு உயிர்களுக்கு நீதி தேவை. மேலும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நாளை மறுநாள் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்.!
July 18, 2025
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை.!
July 18, 2025
“தமிழ்நாட்டின் ஒருமித்த குரலை நாடாளுமன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும்” – மு.க.ஸ்டாலின் அறிவுரை.!
July 18, 2025
ஒரே ஆண்டில் இவ்வளவு வருமானமா? கோடிகளை அள்ளிய பிசிசிஐ!
July 18, 2025