டாஸ்மாக் மதுபானத்தில் சயனைடு.? பெவிக்விக் பசையால் ஒட்டப்பட்ட மூடி.! மயிலாடுதுறை ஆட்சியார் தகவல்.!

Died

மயிலாடுதுறையில் சயனைடு கலந்த மது குடித்து இருவர் உயிரிழந்துள்ளனர். 

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொல்லப்பட்டறை வைத்து இருக்கும் 55 வயதான பழனி குருநாதன் மற்றும் அங்கு வேலை செய்து வரும் 65 வயதான பூரசாமி ஆகியோர் நேற்று அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் இரு மதுபாட்டிகள் வாங்கி  ஒரு பாட்டிலை குடித்துள்ளனர்.

அதன் பிறகு இரவரும் அங்கேயே மயங்கி விழுந்துள்ளனர். இதனை தொடர்ந்து, இருவரையும் அருகில் இருந்தவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பழனி குருநாதன் மற்றும் பூரசாமி ஆகியோர் உயிரிழந்துவிட்டனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணையை தொடர்ந்தனர். அப்போது கொல்லப்பட்டறையில் மீதம் இருந்த ஒரு பாட்டிலை கைப்பற்றி ஆய்வகத்திற்கு ஆய்வு செய்ய அனுப்பினர். அப்பின்னர் அதில் சயனைடு கலந்து இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கூறுகையில், சயனைடு கலந்த மதுபானத்தை இருவரும் குடித்தது உறுதியாகியுளளது. மேலும், அந்த பாட்டில் மூடி பெவிக் விக் எனும் பசை போட்டு ஒட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது எனவும் இது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்