இன்று காலை சென்னை சைதாப்பேட்டையில் இருந்து நந்தனம் பகுதிக்கு ஒரு மாநகர அரசு பேருந்து வந்து கொண்டிருந்துள்ளது.அப்போது நாத்தனம் பகுதியில் ஒய்எம்சிஏ அருகே மூன்று பெண்கள் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது பஸ் பலமாக மோதியது.அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்கள் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர்.
இதன் காரணாமாக இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.உடன் வந்த ஒரு பெண் மட்டும் படுகாயம் அடைந்துள்ளார்.இந்த சம்பவம் காரணமாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
உடனே அவர்கள் காயம் அடைந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.பின்னர் மற்ற இரண்டு பெண்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் வழக்கு தொடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இரு சக்கர வாகனத்தில் வந்த பெண்களில் இருவர் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்த பவானி, நாகலட்சுமி என்றும் தெரியவந்தது.
பின்னர் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த விபத்து காட்சிகளை கொண்டும் ஆய்வு செய்து வருகின்றனர்.விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் ட்ரைவர் குணசேகரன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…