கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரி பாடத்திட்டம்; அமைச்சர் பொன்முடி.!

துணைவேந்தர்களுடன் நடந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு பின் பேசிய அமைச்சர், ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்திய நிலையில், ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு உயர்கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசும்போது, தமிழக பல்கலைக்கழகங்களின் தரம் உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார்.
முதல்வர் அறிவித்த திட்டங்களான நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், மற்றும் திறன் மேம்பாட்டு வளர்ச்சி திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களால் மாணவர்களின் எண்ணிக்கை பல்கலைக்கழகங்களில் அதிகரித்துள்ளது, இதேபோல் அதன் தரமும் உயர்த்தப்படும் எனவும், கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் ஒரே பாடத்திட்டம் கொண்டுவரப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்
பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள பதிவாளர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்கள் போன்ற பணியிடங்களை நிரப்பப்படும் எனவும், உதவிப் பேராசிரியர்களின் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் எனவும் கெளரவ விரிவுரையாளர்கள் ஊதியம் தொடர்பாக வைக்கப்பட்ட கோரிக்கைகளின் பேரில், முதல்வர் அனுமதி வழங்கிய நிலையில், ஊதியமும் 20,000 இலிருந்து 25,000 ஆக உயர்த்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.