மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று தமிழகம் வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்தது.ஆகவே நாடு முழுவதும் வரும் 13-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.மேலும் சென்னை, மும்பை, கொல்கத்தா, கர்னல் பகுதிகளில் தடுப்பூசி பாதுகாப்பு மையங்கள் நிறுவப்பட உள்ளது.நாடுமுழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று தமிழகம் வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .கொரோனா தடுப்பூசி தொடர்பாக தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.குறிப்பாக கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகைக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளார்.சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை , டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மருந்து சேமிப்பு கிடங்கை ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்தும் ஆலோசிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…