நாளை முதல் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் அமெரிக்க தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் பெற்று கொண்டுள்ளார். அதன் பிறகு சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் முதல் முறையாக 24 மணி நேரமும் செயல்பட கூடிய தடுப்பூசி மையத்தை திறந்து வைத்துள்ளார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் முதன்முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து மாற்று திறனாளிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் குறிப்பிடத்தக்க இலக்கை எட்டி கொண்டிருப்பதாகவும், நாளை முதல் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் சென்னை ராஜீவ்காந்தி ஓமந்தூரார் ஸ்டான்லி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் தொடங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக தமிழகத்தில் தடுப்பூசி போடும் திட்டத்தை அதிகப்படுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…