கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தல்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சில நாடுகளில் தொற்று அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கை கோட்பாடுகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாவிட்டால் அவர்களுக்காக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என அறிவித்தார்.
முதல் தவணை தடுப்பூசி போடாத 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டாம் தவணை தடுப்பூசி போடாத 1.32 கோடி பேரை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துதல் 100% நிலையை அடைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அதிகரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தினார். ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலையில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…
லார்ட்ஸ் : லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்…
சென்னை : உலக மக்கள்தொகை தினத்தில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல் என தொகுதி மறுவரையறை குறித்து இன்று உலக…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு தொடர்பாக வினாத்தாள் கசிவு குறித்து…