கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதியிலிருந்து 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே பல்வேறு மாவட்டங்களில் உள்ள சில பள்ளிகளில் ஒரு சில மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று சென்னை சைதாப்பேட்டை ரெட்டி குப்பம் சாலையில் 13 கோடி செலவில் சாலையோர பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று உள்ளது. இதில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் கொரோனா பாதித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இருந்த வகுப்பறைகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய மருத்துவ உதவிகளை அளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், கொரோனாவை வெல்லும் பேராயுதம் தடுப்பூசி தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுவரை தமிழகத்தில் 44% பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாகவும், திட்டமிட்டபடி வருகின்ற செப்டம்பர் 12 இல் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் பணிக்காக கூடுதலாக 1 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி கோரி மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…