வைகோவும் ரஜினியை போல ஆன்மீக அரசியலை பின்பற்ற தொடங்கிவிட்டார் – கராத்தே தியாகராஜன்

வைகோவும் ரஜினியை பின்பற்றி ஆன்மீக அரசியலை பின்பற்ற தொடங்கிவிட்டார் என்று கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
பேட்டி ஒன்றில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ,மதிமுகவினர் பெரும்பாலும் இந்துகள் என்று கூறினார் .மேலும் கோயில் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளேன் என்று வைகோ கூறியிருந்தார்.இந்த நிலையில் கராத்தே தியாகராஜன் வைகோவும் ரஜினியை பின்பற்றி ஆன்மீக அரசியலை பின்பற்ற தொடங்கிவிட்டார் என்று கூறியுள்ளார்.
இது குறித்து கராத்தே தியாகராஜன் சென்னையில் கூறுகையில்,ரஜினி இந்துத்துவாவை பின்பற்ற சொல்லவில்லை, இந்து கோயில்களைத்தான் கும்பிட சொன்னார்.ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி.வைகோவும் ரஜினியை பின்பற்றி ஆன்மீக அரசியலை பின்பற்ற தொடங்கிவிட்டார். அதனால் தான் வைகோ மதிமுகவினர் பெரும்பாலும் இந்துக்கள், கோயில் கும்பாபிஷேகம் நடத்தினேன் என்று கூறினார் என்று தெரிவித்தார்.
எம்.ஜி.ஆரை பார்க்கவும், கருணாநிதி பேச்சை கேட்கவும் கூட்டம் வரும். தற்போது அது போன்ற கூட்டம் வருவது ரஜினிக்குதான் என்றும் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025