Tag: mdmk

”வைகோவால் மனஉளைச்சல்.., ஆக.2ம் தேதி உண்ணாவிரதம்” – மல்லை சத்யா.!

சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (மதிமுக) துணைப் பொதுச் செயலாளரான மல்லை சத்யா, கட்சித் தலைவர் வைகோவுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளார். இந்தப் போராட்டத்திற்கு முக்கியக் காரணம், வைகோ தன்னை “துரோகி” எனக் கூறி சிறுமைப்படுத்தியதாக மல்லை சத்யா குற்றம்சாட்டியுள்ளார். 32 ஆண்டுகால பொது வாழ்க்கையை கேள்விக்குட்படுத்தும் வகையில் வைகோவின் இந்தக் குற்றச்சாட்டு அமைந்ததாகவும், இதனால் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மதிமுகவில் வைகோவின் மகன் துரை வைகோவை முன்னிறுத்தும் […]

#Vaiko 3 Min Read
Vaiko -Mallai Sathya

மாநிலங்களவையில் இருந்து ஓய்வு.. பிரியாவிடை உரையில் வைகோ பேசியது என்ன?

டெல்லி : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றிய பின்னர், ஜூலை 24, 2025 அன்று மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெற்றார். தமிழக அரசியலில் “நாடாளுமன்றப் புயல்” என்று புகழப்படும் வைகோ, தனது பதவிக் காலம் முடிவடைந்த நாளில் மாநிலங்களவையில் உருக்கமான பிரியாவிடை உரையாற்றினார். தமிழர்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் ஈழ விடுதலைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்பதாக உறுதியளித்த அவர், தனது அரசியல் […]

#DMK 6 Min Read
vaiko

“மதிமுகவில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழலுக்கு நான் காரணம் அல்ல” – மல்லை சத்யா அறிக்கை.!

சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் (மதிமுக) ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு தான் காரணம் இல்லை என்று மல்லை சத்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கை, கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் வந்துள்ளது. மல்லை சத்யா மீதான அதிருப்தியால் கட்சி பதவியை துறப்பதாக 3 மாதத்திற்கு முன்பு துரை வைகோ முதலில் அறிவித்ததும், பிறகு 2 பேரையும் வைகோ சமாதானம் செய்த நிலையில் நிலைமை சீரானது என்று நினைந்தனர். அதன்பிறகு 2 பேர் […]

#Vaiko 5 Min Read
Vaiko Mallai Sathya

கூட்டணி ஆட்சி வேண்டும் என நான் விரும்பவில்லை…மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு!

சென்னை :  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் “திமுக அரசுக்கு எதிராக எந்தவொரு கட்டத்திலும், எந்தப் பிரச்சனையிலும் நாங்கள் ஒரு வார்த்தை கூட விமர்சனம் செய்ததில்லை.  இனியும் செய்ய மாட்டோம். கலைஞர் (மு.கருணாநிதி) இருந்தவரை அவருக்கு பக்கபலமாக இருந்தேன். அவருக்கு நான் அளித்த வாக்குறுதிப்படி, முதல்வர் ஸ்டாலினுக்கும் உறுதுணையாக இருப்பேன். இந்த வாக்குறுதியில் உறுதியாக இருக்கிறேன். […]

#DMK 5 Min Read
Vaiko about dmk

எத்தனை சீட் …விளக்கம் கொடுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!

சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து திமுகவுடனான உடன்பாட்டின் போது முடிவு செய்யப்படும் என அறிவித்தார். சென்னையில் 2025 ஜூன் 29 அன்று நிர்வாகிகளுடன் நடந்த கூட்டத்திற்குப் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “நாங்கள் திராவிடக் கொள்கையைப் பின்பற்றுபவர்கள். திமுக கூட்டணியில் உறுதியாகத் தொடர்வோம். ஆனால், எத்தனை தொகுதிகள் வேண்டும் என இதுவரை எந்தக் […]

#DMK 5 Min Read
VAIKO

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து பங்கேற்கும் என சென்னையில் நடந்த மதிமுகவின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மதிமுகவின் நிர்வாகிகள் திமுகவில் சேர்க்கப்பட்டு வரும் நிலையில், மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் இன்று ஜூன் 29-ந் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், மதிமுகவின் தலைவர் வைகோ மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் […]

#DMK 4 Min Read
mdmk dmk

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் மதிமுக போட்டியிட விரும்புவதாக திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். திமுக தலைமையிலான கூட்டணியில் எட்டு ஆண்டுகளாக உறுதியாக இருந்து வரும் மதிமுக, கட்சியின் அங்கீகாரத்தை மேலும் வலுப்படுத்த, 12 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என தொண்டர்களும், நிர்வாகிகளும் ஆசைப்படுவதாக அவர் கூறினார். இந்தப் பேட்டி, திருச்சி […]

#DMK 5 Min Read
mk stalin durai vaiko

மதிமுக அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர் கல் வீச்சு தாக்கியதால் பரபரப்பு.!

சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது, இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு வீரர் சீருடையில் வந்த மர்ம நபர் ஒருவர், மதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்து கல்வீச்சு மற்றும் உருட்டு கட்டையால் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் அலுவலகத்தின் உள்ளே இருந்த மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. பின்னர், தகவல் அறிந்த வந்த போலீசார், மர்மநபரை கைது செய்து விசாரணைக்காக […]

#Chennai 3 Min Read
MDMK Office

”திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை.., 2026ல் ஈபிஎஸ் தலைமையில் தான் ஆட்சி” – நயினார் நாகேந்திரன்.!

நெல்லை: கடந்த ஏப்ரல் 11ம் தேதி அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) கீழ் போட்டியிடும் என அறிவித்தார். இந்தக் கூட்டணி தமிழ்நாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (ஈபிஎஸ்) தலைமையில் செயல்படும், மேலும் தேசிய அளவில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இருக்கும் என்று அவர் தெரிவித்தார். அதே நேரம், […]

#ADMK 5 Min Read
Nainar Nagendran - eps

மல்லை சத்யாவுடன் சமரசம்! ராஜினாமா முடிவை திரும்ப பெற்ற துரை வைகோ!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில்,  இன்று சென்னை எழும்பூரில் உள்ள மதிமுகவின் தலைமை அலுவலகத்தில், நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு அவர் தனது விலகல் முடிவை மாற்றியுள்ளார். அதன்பிறகு மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக சற்று வேதனையுடன் மல்லை சத்யா பேசியிருந்தார். இதனையடுத்து, மதிமுக முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவை துரை வைகோ […]

#Trichy 5 Min Read
DuraiVaiko and MallaiSathya

வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுங்கள்! மல்லை சத்யா பேச்சு!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர் வெளியீட்டு இருந்த அறிக்கையில் ” மதிமுக தலைவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஒருவர் செயல்படுகிறார். கட்சிக்கு பழியை சுமத்தி அதில் சுகம் காணும் நபர் மத்தியில் என்னால் கட்சிப் பணி செய்ய முடியாது என்னால் இயக்கத்திற்கோ, தலைவருக்கோ எந்த சேதமும் வந்துவிடக்கூடாது . கடந்த 7 ஆண்டுகளாக நான் மேற்கொண்டு வந்த முயற்சிகளை கட்சியினர் தொடர […]

#Trichy 5 Min Read
MallaiSathya

விலகல் முடிவில் உறுதியாக இருக்கும் துரை வைகோ…ஏற்க மறுக்கும் மதிமுக தலைமை!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார். அவர் வெளியீட்டு இருந்த அறிக்கையில் ” மதிமுக தலைவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஒருவர் செயல்படுகிறார். கட்சிக்கு பழியை சுமத்தி அதில் சுகம் காணும் நபர் மத்தியில் என்னால் கட்சிப் பணி செய்ய முடியாது என்னால் இயக்கத்திற்கோ, தலைவருக்கோ எந்த சேதமும் வந்துவிடக்கூடாது . கடந்த 7 ஆண்டுகளாக நான் மேற்கொண்டு வந்த முயற்சிகளை கட்சியினர் தொடர […]

#Trichy 6 Min Read
durai vaiko vaiko

“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!

சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கட்சி நிர்வாகிகள் மற்றும் தலைவர் வைகோவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துரை வைகோ 2021 அக்டோபர் மாதம் மதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளராகப் பொறுப்பேற்று, பின்னர் பொதுக்குழுவில் முதன்மைச் செயலாளராக உயர்ந்தவர். அவர் தனது  விலகல் முடிவுக்கு காரணம் குறித்து அறிக்கையில்,  கட்சிக்கும் தலைமைக்கும் பாதிப்பு ஏற்படுத்தி வரும் ஒரு நபரின் செயல்களை குறிப்பிட்டுள்ளார். மேலும், […]

#Vaiko 4 Min Read
Durai Vaiko

துரை வைகோ பதவி விலகல்: “நாளை சுமூகத் தீர்வு எட்டப்படும்” – மதிமுக பொருளாளர்.!

சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை சத்யாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அண்மையில் நடந்த கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் வைகோ ஈடுபட்டார். இந்நிலையில், கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும், ஆனாலும் அடிப்படை தொண்டனாக கட்சியில் இருப்பேன் என்றும் அவர் அறிவித்துள்ளார். இதனையடுத்து, கட்சியில் இருந்து துரை வைகோ விலகியது தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக அவருடைய தந்தையும், கட்சியின் நிறுவனருமான […]

#Vaiko 3 Min Read
DURAIVAIKO

மதிமுகவில் இருந்து விலகிய துரை வைகோ! ஷாக்காகி வைகோ சொன்ன பதில்?

சென்னை :  துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து வந்த நிலையில், தற்போது மதிமுக முதன்மை செயலாளர் என்ற பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிக்கை வாயிலாக அறிவித்துள்ளது தான் அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது. கட்சியில் இருந்து விலகுவது குறித்து அவர் வெளியீட்டு இருந்த அறிக்கையில் ” மதிமுக தலைவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஒருவர் செயல்படுகிறார். கட்சிக்கு பழியை சுமத்தி […]

#Trichy 4 Min Read
durai vaiko and vaiko

“இவர்கள் மத்தியில் வேலை செய்ய முடியாது! நான் விலகுகிறேன்!” துரை வைகோ பரபரப்பு அறிக்கை! 

சென்னை : திருச்சி எம்பி துரை வைகோ, தனது கட்சியின் முக்கிய தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார். துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து வந்தார். தற்போது மதிமுக முதன்மை செயலாளர் என்ற பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிக்கை வாயிலாக அறிவித்துள்ளார். அதில், மதிமுக தலைவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஒருவர் செயல்படுகிறார். கட்சிக்கு பழியை சுமத்தி அதில் சுகம் […]

#Trichy 3 Min Read
Trichy MP Durai Vaiko

ஆளுநர் ஆர்.என் ரவி அளிக்கும் தேநீர் விருந்து… திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு.!

சென்னை : குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்துக்கொள்ளாமல் புறக்கணிக்க உள்ளதாக திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளது. வருகின்ற (ஜனவரி 26 ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை குடியரசு நாளன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இந்நிலையில், இந்த தேநீர் விருந்தை புறக்கணிக்க உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை […]

#CPI 6 Min Read
RN Ravi - Congress

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

சென்னை : வைகோ அப்பலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வலது தோள்பட்டை காயம் காரணமாக 2 நாள்களுக்கு முன் அங்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில நாள்களுக்கு முன் கீழே விழுந்ததில், அவருக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. வலது தோள்பட்டையில் ஏற்கனவே எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அந்த அறுவை சிகிச்சையின் போது வைக்கப்பட்ட பிளேட்டை அகற்ற மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

#Chennai 2 Min Read
Vaiko - Apollo Hospital

தோள்பட்டையில் டைட்டானியம் பிளேட்… 40 நாட்கள் ரெஸ்ட்.! துரை வைகோ கொடுத்த அப்டேட்.!

வைகோ: மதிமுக நிறுவனர் வைகோ அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் இருக்கிறார் என அவரது மகன் துரை வைகோ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த மே 25ஆம் தேதி (சனிக்கிழமை) மதிமுக நிறுவனர் வைகோ நெல்லையில் உள்ள அவரது சகோதரர் வீட்டில் தவறி விழுந்ததில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டார். சென்னை அப்பாலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட […]

#Vaiko 6 Min Read
Durai Vaiko

‘நான் நலமுடன் திரும்பி வருவேன் ..’! அறுவை சிகிச்சைக்கு முன் வீடியோ வெளியிட்ட வைகோ!

வைகோ :  அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கும் மதிமுக பொதுச்செயலாளரான வைகோ மருத்துவமனையில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மதிமுக பொதுச் செயலாளரான வைகோ கடந்த மே 25-ம் தேதி நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள அவரது சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் தங்கி இருந்த போது அன்றிரவு கால் தடுக்கி கீழே விழுந்துள்ளார். இதனால் அவருக்கு வலது தோள்ப்பட்டையில் சிறிதளவு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவரை உடனடியாக நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு […]

#Vaiko 7 Min Read
Vaiko