மதிமுகவில் இருந்து விலகிய துரை வைகோ! ஷாக்காகி வைகோ சொன்ன பதில்?
துரை வைகோ கட்சியில் இருந்து விலகிய முடிவை தொலைக்காட்சி வழியாக தான் பார்த்துக்கொண்டேன் என வைகோ அதிர்ச்சியுடன் பேசியுள்ளார்.

சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து வந்த நிலையில், தற்போது மதிமுக முதன்மை செயலாளர் என்ற பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிக்கை வாயிலாக அறிவித்துள்ளது தான் அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது.
கட்சியில் இருந்து விலகுவது குறித்து அவர் வெளியீட்டு இருந்த அறிக்கையில் ” மதிமுக தலைவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஒருவர் செயல்படுகிறார். கட்சிக்கு பழியை சுமத்தி அதில் சுகம் காணும் நபர் மத்தியில் என்னால் கட்சிப் பணி செய்ய முடியாது என்னால் இயக்கத்திற்கோ, தலைவருக்கோ எந்த சேதமும் வந்துவிடக்கூடாது .
கடந்த 7 ஆண்டுகளாக நான் மேற்கொண்டு வந்த முயற்சிகளை கட்சியினர் தொடர வேண்டும். ஏப்ரல் 20-ல் சென்னையில் நடைபெறும் கட்சி நிர்வாக குழு கூட்டத்தில் நான் பங்கேற்ப்பேன். திருச்சி எம்பியாக நான் தொடர்ந்து செயல்படுவேன்” என கட்சியில் இருந்து வெளியேறுவதற்கான காரணத்தையும் அவர் கூறியிருந்தார்.
இதனையடுத்து, கட்சியில் இருந்து துரை வைகோ விலகியது தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக அவருடைய தந்தையும், கட்சியின் நிறுவனருமான வைகோ தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசி வாயிலாக அவர் கொடுத்த பேட்டியில் கூறியதாவது ” நான் துரை வைகோ விலகியதை தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்துகொண்டேன். திடீரென அவர் கட்சியில் இருந்து விலக முடிவு செய்திருப்பது எனக்கு அதிர்ச்சியாக தான் இருக்கிறது” எனவும் அதிர்ச்சியுடன் வைகோ பேசியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025