“மதிமுகவில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழலுக்கு நான் காரணம் அல்ல” – மல்லை சத்யா அறிக்கை.!
உங்கள் மகனுக்காக என்னை வீழ்த்துவதா? என வைகோவிற்கு மல்லை சத்யா வேதனையுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் (மதிமுக) ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு தான் காரணம் இல்லை என்று மல்லை சத்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கை, கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் வந்துள்ளது.
மல்லை சத்யா மீதான அதிருப்தியால் கட்சி பதவியை துறப்பதாக 3 மாதத்திற்கு முன்பு துரை வைகோ முதலில் அறிவித்ததும், பிறகு 2 பேரையும் வைகோ சமாதானம் செய்த நிலையில் நிலைமை சீரானது என்று நினைந்தனர். அதன்பிறகு 2 பேர் இடையேயான கருத்து வேறுபாடு குறையவில்லை எனவும், 2 பேரின் ஆதரவாளர்கள் பிரச்னையை ஊதி பெரிதாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மல்லை சத்யா தற்போது வெளியிட்டுள்ள தனது அறிக்கையில், ”மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடர்ந்து இயங்க வேண்டும் என்ற உணர்வுடனே இதுநாள் வரை இருந்து வந்துள்ளேன் ஆனால் கழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை அதற்கு நிச்சயமாக நான் காரணம் இல்லை.
32 ஆண்டுகளாக வசந்தத்தை தொலைத்து இரவு பகல் பாராமல் கட்சி தலைவர் வைகோவுக்கு பணியாற்றி வந்த என் மீது அபாண்டமாக துரோகப் பழி சுமத்தப்பட்டது. என் அரசியல் பொது வாழ்க்கையை வீழ்த்துவதற்கு வேறு ஏதாவது ஒரு குற்றச்சாட்டை சொல்லி இருக்கலாமே அல்லது ஒரு பாட்டில் விஷம் வாங்கி கொடுத்து குடிக்க சொல்லி இருந்தால் குடித்து செத்துப் போய் இருப்பேனே.
அறம் சார்ந்த என் அரசியல் பொதுவாழ்வை உங்கள் மகனுக்காக வீழ்த்துவதற்கு துரோகம் என்ற சொல்லா? நான் மாத்தையா போன்று துரோகம் செய்தேனா? அன்புத் தலைவர் வைகோ அவர்களே அறம் சார்ந்த என் அரசியல் பொதுவாழ்வை உங்கள் மகனுக்காக வீழ்த்துவதற்கு துரோகம் என்ற சொல்லா கிடைத்தது.
உங்களுக்கு எதிராக நான் சிந்தித்தேன் செயல்பட்டேன் என்பது உண்மையானால் நீதி நின்று நிலைத்து என்னை சுட்டெரிக்கட்டும். உங்கள் தாள் பணிந்து கேட்டுக் கொள்கின்றேன், இனி எக்காலத்திலும் யார் மீதும் இதைப் போன்ற அபாண்டமான பழியை சுமத்தி பழிக்கு ஆளாக வேண்டாம். தங்களிடம் நான் எதையெல்லாம் கூறினேனோ அது தற்போது நடந்து கொண்டு வருகிறது” என விரிவாக வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழ்நாடு காவல்துறையில் 33 உயரதிகாரிகள் பணியிட மாற்றம்.!
July 14, 2025