“இவர்கள் மத்தியில் வேலை செய்ய முடியாது! நான் விலகுகிறேன்!” துரை வைகோ பரபரப்பு அறிக்கை!
மதிமுக முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி எம்.பி துரை வைகோ தற்போது தெரிவித்துள்ளார்.

சென்னை : திருச்சி எம்பி துரை வைகோ, தனது கட்சியின் முக்கிய தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார். துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து வந்தார்.
தற்போது மதிமுக முதன்மை செயலாளர் என்ற பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிக்கை வாயிலாக அறிவித்துள்ளார். அதில், மதிமுக தலைவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஒருவர் செயல்படுகிறார். கட்சிக்கு பழியை சுமத்தி அதில் சுகம் காணும் நபர் மத்தியில் என்னால் கட்சிப் பணி செய்ய முடியாது
என்னால் இயக்கத்திற்கோ, தலைவருக்கோ எந்த சேதமும் வந்துவிடக்கூடாது . கடந்த 7 ஆண்டுகளாக நான் மேற்கொண்டு வந்த முயற்சிகளை கட்சியினர் தொடர வேண்டும். ஏப்ரல் 20-ல் சென்னையில் நடைபெறும் கட்சி நிர்வாக குழு கூட்டத்தில் நான் பங்கேற்ப்பேன். திருச்சி எம்பியாக நான் தொடர்ந்து செயல்படுவேன் என்றும் துரை வைகோ தனது நீண்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மதிமுக முதன்மைச் செயலாளர்
பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.
——————————————-அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போல இருந்தவன் நான் என்பதை அனைவரும் அறிவர். 2018 ஆம் ஆண்டு இயக்கத் தந்தை வைகோ அவர்கள் திடீரென உடல்… pic.twitter.com/PVHVqChFVw
— Durai Vaiko (@duraivaikooffl) April 19, 2025