வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை இன்று முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வேல் யாத்திரைக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து தமிழக அரசு வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் பாஜக சார்பில் தடையை மீறி வேல் யாத்திரை திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி ,நேற்று காலை தடையை மீறி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், கையில் வேலுடன் திருத்தணி நோக்கி புறப்பட்டார்.பின் தடையை மீறி தொடங்கப்பட்ட வேல் யாத்திரையை போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்த யாத்திரையை தொடங்கிய தமிழக பாஜக தலைவர், எல்.முருகன் மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளையும் போலீசார் கைது செய்தனர்.பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த தமிழக டி.ஜி.பி உத்தரவை எதிர்த்து, யாத்திரைக்கு அனுமதி அளிக்க கோரி, பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது.அப்பொழுது இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ,பாஜகவின் வேல் யாத்திரைக்கான தடையை நீக்க முடியாது. பாஜகவுக்கு குறைந்தபட்ச பொறுப்புணர்வு வேண்டும் என்றும் பாஜகவின் வேல் யாத்திரையில் மாஸ்க் அணியாதவர்களுக்கு ஏன் அபராதம் விதிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளது நீதிமன்றம். மேலும் கோயிலுக்கு 100 பேர் மட்டுமே செல்வோம் என்றால் டிஜிபியை அணுகலாமே என நீதிமன்றம் கருத்து தெரிவித்து . மேலும் வழக்கு விசாரணையை நவம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…