தேவாலயத்தில் பிரார்த்தனைக்கு பிறகு கிராமத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் லூர்து பிரான்சிஸ் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் அஞ்சலி.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் 55 வயதான லூர்து பிரான்சிசை நேற்று அலுவலகத்திற்குள் புகுந்து மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டினர். இதில், படுகாயமடைந்த விஏஓ லூர்து பிரான்சிஸ் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விஏஓ கொலை
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ராம சுப்ரமணியன் என்பவர் கைது செய்த நிலையில், 4 தனிப்படை அமைத்து மற்றொரு குற்றவாளியை வலைவீசி தேடி வந்தனர். இன்னொரு குற்றவாளியான மாரிமுத்துவை இன்று நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில், விஏஓ வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உறுதியளித்திருந்தார். இந்த நிலையில், கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆட்சியர் அஞ்சலி
இந்த நிலையில், தேவாலயத்தில் பிரார்த்தனைக்கு பிறகு கிராமத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் லூர்து பிரான்சிஸ் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் மற்றும் அரசியல் கட்சியினர் , அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…