விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 14 அதானி-அம்பானி நிறுவனங்களையும், பொருள்களையும் புறக்கணிக்கும் பிரச்சார இயக்கத்தை விடுதலை சிறுத்தை கட்சி மேற்கொள்கிறது.
வேளாண் விரோத சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் முற்றுகையிட்டு போராடி வரும் லட்சக்கணக்கான விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு மதிக்காததால் தமது போராட்டத்தை அவர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். டிசம்பர் 14ஆம் தேதி டெல்லியில் சுற்றியுள்ள மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தலைநகரை நோக்கி திரளுமாறு இதர மாநிலங்களில் உள்ள விவசாயிகள் ஆதரவு இயக்கங்களை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
அதானி, அம்பானி ஆகிய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகவே இந்த வேளாண் விரோத சட்டங்கள் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே அதானி அம்பானி ஆகியோரின் நிறுவனங்களையும், பொருள்களையும் புறக்கணிப்பது என்ற அறைகூவலை விவசாய இயக்கங்கள் விடுத்துள்ளனர். அதை ஆதரித்து வரும் 14ம் தேதி தமிழ்நாட்டிலும், புதுவையிலும் உள்ள அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட், பெட்ரோல் பங்கு, ஜியோ விற்பனை கடைகள் ஆகியவற்றின் முன்பாக அதானி அம்பானி பொருட்களைப் புறக்கணியுங்கள என்ற பிரசார இயக்கத்தை விடுதலைச்சிறுத்தை கட்சிகள் மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
டெல்லியில் போராட்டம் விவசாயிகளுக்கு ஆதரவான இந்த இயக்கத்தில் பங்கேற்குமாறு ஜனநாயக சக்திகளையும் அறைகூவி அழைக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…