கடந்த சில நாட்களுக்கு முன்பு நெய்வேலியில் நடைபெற்ற மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் விஜய்யை சென்னை அழைத்துவரப்பட்டு விஜயின் சாலிகிராமம், நீலாங்கரை மற்றும் பனையூரில் சுமார் 20 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தி நிறைவடைந்தது. பின்னர் நடிகர் விஜய் படப்பிப்பு தளத்துக்கு சென்றார். அப்போது பாஜகவினர் அங்கு படப்பிடிப்பு நடத்த கூடாது என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அவருக்கு ஆதரவாக இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, அமீர் போன்ற பல சினிமா பிரபலங்களும், வேல்முருகன், சீமான் போன்ற அரசியல் தலைவர்களும் கருத்து கூறினர். இதைத்தொடர்ந்து நெய்வேலியில் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் குவிந்தனர். பின்னர் நடிகர் விஜய் ரசிகர்கள் மத்தியில் வேன் மீது ஏறி செல்பி எடுத்து அதை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
இந்த நிலையில் திருவாடானை சட்டமன்ற உறுப்பினரும் முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் அவரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் ரஜினி பா.ஜ.க விற்கு ஆதரவான கருத்துகளை பேசி வருவதால் கூட வருமான வரித்துறை அவருக்கு விலக்கு அளித்திருக்கலாம் என்றும், மாஸ்டர் படப்பிடிப்பு நடப்பதே தெரியாமல் இருந்த இடத்தில் விசாரணை என்ற பெயரில் வருமான வரித்துறை சென்றதால், தற்போது நெய்வேலியில் மட்டும் இருப்பவர்கள் ஆயிரக்கணக்கானோர் அங்கு கூடி நடிகர் விஜயின் பலத்தை மத்திய, மாநில அரசுகளுக்கு காட்டியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
லக்னோ : ஐபிஎல்2025-65 வது போட்டி லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)…
சென்னை : தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது, தமிழக…
லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…
அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…
நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…
லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…