Vinayagar Chaturthi: கோலாகலமாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி.! ஆளுநர் ரவி வாழ்த்து.!

Ganesh Chaturthi

விநாயகர் சதுர்த்தி விழா என்பது இந்துக்களின் முக்கியமான விழாவாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 18ம் தேதியான இன்று கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது.

விநாயகரின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படும் இந்த நாளில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பக்கத்தில், “விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துக்கள். விநாயக‌ பெருமான் அனைவருக்கும் ஞானம், வலிமை, வெற்றி, மகிழ்ச்சி, வளம் ஆகியவற்றை வழங்கட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்