முதல் தலைமுறைக்கும் 3ம் தலைமுறைக்கும் யுத்தம் – நீதிமன்றத்தில் ஆஜரான அண்ணாமலை பேட்டி

Published by
பாலா கலியமூர்த்தி

திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டிஆர் பாலு தொடர்ந்த வழக்கில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆஜர்.

திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் கட்சியின் மூத்த தலைவர்களின் சொத்துப் பட்டியலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டதை எதிர்த்து முதலமைச்சர் உள்பட திமுகவினர் வழக்கு தொடுத்தனர். அந்தவகையில், அவதூறான கருத்துக்களை அண்ணாமலை தெரிவித்ததாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திமுக எம்பி டிஆர் பாலு வழக்கு தொடுத்திருந்தார்.

திமுக சொத்து பட்டியல் விவகாரத்தில் அடிப்படை ஆதாரமின்றி தன்னைப்பற்றி அவதூறு கருத்துக்களை கூறியதாகவும், அவரது கருத்துக்கள் பொய்யானவை, எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது எனவும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டிஆர் பாலு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அண்ணாமலை ஜூலை 14ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டிஆர் பாலு தொடர்ந்த வழக்கில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்றத்தில் ஆஜரான பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, Dmkfiles பாகம் 2-ல் அதிமுகவில் இருந்து திமுக சென்ற அமைச்சர்கள் தான் அதிகம்.  பாஜகவின் ஊழலுக்கு எதிரான போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி சென்றுள்ளது. ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் எங்களுடன் இணைய வேண்டும். தமிழ்நாட்டில் முதல் தலைமுறைக்கும் 3ம் தலைமுறைக்கும் யுத்தம் நடைபெறுகிறது என தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“அயோ முடியல சீக்கிரம் வாங்க”..விரலில் பட்ட பந்து வலியால் துடித்த ஸ்டீவ் ஸ்மித்!

லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கடந்த ஜூன் 11-ஆம் தேதி முதல்  லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட்…

13 hours ago

“ஏர் இந்தியா விமான விபத்துக்கு முழு பொறுப்பேற்கிறோம்”..டாடா தலைவர் சந்திரசேகரன் வேதனை!

அகமதாபாத் : நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்…

14 hours ago

நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை! அடுத்த 2 நாளுக்கு ரெட் அலர்ட்!

நீலகிரி : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால்…

14 hours ago

“நல்ல நடிகன்னு மக்கள் சொல்லட்டும்”…கண்கலங்கி அழுத விஜயகாந்த் மகன்கள்!

சென்னை : விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள படைத்தலைவன் திரைப்படம் இன்று (ஜூன் 13, 2025) திரையரங்குகளில்…

14 hours ago

WTC Final : 282 அடிச்சா கோப்பை உங்களுக்கு…தென்னாப்பிரிக்காவுக்கு டார்கெட் வைத்த ஆஸி!

லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கடந்த ஜூன் 11-ஆம் தேதி முதல்  லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில்…

15 hours ago

“உடனே முதல்வர் ஆக முடியாது”… விஜய்க்கு குறித்து அன்பில் மகேஷ் கருத்து!

சென்னை : த.வெ.க தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் அவர் திமுக குறித்து பேசிவருவது குறித்தும் திமுகவை சேர்ந்த அமைச்சர்களிடம்…

16 hours ago