காவிரி டெல்டா பாசனத்திற்காக இன்று கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது!

- கடந்த 12ஆம் தேதி மேட்டூர் அணையை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
- இந்நிலையில் இன்று கல்லணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.
கடந்த 12-ஆம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்து வைத்தார். இந்த தண்ணீர் இன்று அதிகாலை கல்லணைய வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து காவிரி டெல்டா பாசனத்திற்காக இன்று கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் எம் ஆர் கே பன்னீர்செல்வம், கே என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, எஸ் எஸ் சிவசங்கர், மெய்நாதன் மற்றும் காவிரி டெல்டா மாவட்ட கலெக்டர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பொதுப்பணித் துறை, வேளாண் துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், கொரோனா காரணமாக சமூக இடைவெளிகளை கடைபிடித்து கல்லணை திறப்பு நிகழ்ச்சி நடைபெறும் எனவும் பொதுப்பணித் துறை வட்டாரங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025