புதுச்சேரியில் 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது…!

புதுச்சேரியில் 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது.
புதுச்சேரியில் சபாநாயகரை தேர்வு செய்ய 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம், வரும் இன்று கூடுகிறது. இக்கூட்டமானது காலை 9:30 மணிக்கு நடைபெறவுள்ளது என பேரவை செயலாளர் முனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘மாண்புமிகு துணைநிலை ஆளுநர் அவர்கள் புதுச்சேரி 15வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் வரும் ஜூன் மாதம் 16ஆம் தேதி (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு புதுச்சேரி சட்டப்பேரவை மன்றத்தில் கூட்டப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், மாண்புமிகு துணைநிலை ஆளுநர் அவர்கள் வரும் ஜூன் 16ஆம் தேதியை (புதன்கிழமை) புதுச்சேரி 15வது மாதம் சட்டப்பேரவையின் பேரவைத்தலைவருக்கான தேர்தல் நடத்தும் தேதியாக நிர்ணயித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகளின் விதி 9(2)-யின் கீழ்,நியமனச்சீட்டுக்கள் வரும் ஜூன் மாதம் 15ஆம் தேதி (செவ்வாய்கிழமை) நண்பகல் 12.00 மணி வரை, பேரவைச் செயலாளரால் பெற்றுக்கொள்ளப்படும்.
பேரவைச் நியமனச்சீட்டுக்களை செயலாளரிடம் பெற்றுக்கொள்ளலாம். நியமனச்சீட்டுக்களை அளிப்பதற்கான அறிவிப்பு ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனித்தனியாக அனுப்பப்பட்டுள்ளது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!
July 7, 2025
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!
July 7, 2025