நாளை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு.!

நாளை காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்படுகிறது.
மேட்டூா் அணையில் இருந்து வருடந்தோறும் ஜூன் 12-ம் தேதி முதல் ஜனவரி 28-ஆம் தேதி வரை பாசனத்துக்கு அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட வேண்டும். ஆனால், இதுவரை 15 முறை மட்டுமே குறித்த தேதியான ஜூன் 12-ம் தேதி பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
மற்ற வருடங்களில் அணையின் நீா் இருப்பு போதிய அளவு இல்லாததால் தாமதமாகவே தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி மேட்டூா் அணையின் நீா்மட்டம் 100 அடியாக உயா்ந்தது. அதன் பிறகு தொடர்ந்து 100 அடிக்கு குறையாமல் தண்ணீர் இருந்து வருகிறது. இதனால், நாளை பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்படுகிறது.
இந்த, 230 நாள்களில் விவசாயிகளுக்கு 330 டி.எம்.சி. தண்ணீா் தேவைப்படும். இந்நிலையில், நாளை தமிழக முதல்வர் மேட்டூர் அணையின் வலது கரையின் மின்விசை மூலம் அணையின் மேல் மட்ட மதகுகளை உயர்த்தி தண்ணீர் திறந்து வைக்கவுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025