மஹாராஷ்டிராவில் 1 லட்சத்தை நெருங்குகிறது ! ஒரே நாளில் 152 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தனது கோர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது .இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது ,இதில் முதலிடத்தில் உள்ள மஹாராஷ்டிராவில் இதுவரை இல்லாத பாதிப்பாக இன்று பதிவாகியுள்ளது.
மஹாராஷ்டிராவில் இன்று மட்டும் 3,607 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, இன்று மட்டும் 152 பேர் இறந்துள்ளனர் .இதுவரை பதிவான எண்ணிக்கையில் இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும் .இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97,648 ஆக அதிகரித்துள்ளது ,மேலும் இறப்பு எண்ணிக்கை 3,590 ஆக உயர்ந்துள்ளது .
இன்று பதிவான எண்ணிக்கையில் மும்பையில் மட்டும் 1,500 பேர் பாதிக்கபட்டுள்ளனர் 97 பேர் இறந்துள்ளனர் .இதற்கிடையில் மகாராஷ்டிராவின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறுகையில் ஜூன் 30 தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மக்கள் பின்பற்றாவிட்டால் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025